தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 11மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய இடியுடன் மழை பெய்தது இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது ஒரு சில இடங்களில் சாலையோர மரக்கிளைகள் மரங்கள் முறிந்து விழுந்தன.
மழை பெய்ததால் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடவாச்சேரி தண்டேஸ்வரநல்லூர் இளநாங்கூர் செட்டிமேடு வக்காரமாரி நாஞ்சலூர் சிவாயம் கிராமங்களில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் மின் நிறுத்தப்பட்டுள்ளதால் இருளில் சூழ்ந்த கிராமங்கள்.
- தமிழக குரல் சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக