கும்பகோணம் சமையல் கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் கூட்டம் சங்கத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் சங்கத் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் சுரேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் விஜய் பால் நிறுவனத்தின் சார்பில் கும்பகோணம் சமையல் கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக விஜய் பால் நிறுவனத்தின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சங்கத்தின் பொருளாளர் அபிஷேக் முரளி மற்றும் துனைதலைவர் சுரேஷ், நிர்வாக கமிட்டி தலைவர், கமிட்டி உறுப்பினர்களும், மூத்த சமையல் கலைஞர் சேதுராமன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். துனைதலைவர் சுரேஷ் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக