பாலம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

பாலம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணா.

சுசீந்திரம் அருகே நல்லூர்-இரவிபுதூர் இடையே உள்ள பாலம் பழுதடைந்ததை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக அந்த வழியே சென்ற பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் நல்லூர், இரவிபுதூர் மக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் மருங்கூர் வரை சென்று பஸ் ஏறினர். இந்த நிலையில் பாலத்தின் ஒரு பகுதி முடிக்கப்பட்ட நிலையில், மற்றொரு பகுதி பணிகள் கிடப்பில் போடப்பட்டன. 


இதனை கண்டித்து இரவிபுதூர் பகுதியில் இன்று பொது மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள், ஒரு மாதத்தில் பாலம் பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


- கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad