பந்தலூர் பஜாரில் சிறுத்தை ஒன்று தொழிற்சாலை வழியாக சென்றதின் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
கூடலூர் பந்தலூர் போன்ற பகுதிகளில் காட்டு விலங்குகள் அதிகளவு குடியிருப்பு பகுதியில் வன விலங்குகள் உலா வந்து கொண்டிருக்கிறது .
இந்த சூழலில் சில சமயம் மனிதர்களை தாக்குவதும் உண்டு இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் பல்வேறு பகுதிகளுக்கு காணப்படுகின்றது.
இந்நிலையில் பந்தலூர் பகுதியில் உள்ள இன்கோ தொழிற்சாலைக்கு செல்லும் பாதையில் சாலையில் விடியற் காலை நான்கு மணி அளவில் உலா வந்த சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றதது இதை அவ்வழியே வாகனத்தில் சென்ற படம் பிடித்து இருக்கிறார் இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விடிய காலை நான்கு மணி அளவில் உலா வந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர் . இச்சம் பவத்தைஅறிந்த வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மக்கள் வனத்துறையினரிடம் கூட்டு வைத்து பிடித்து காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக