நீலகிரி மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் மாதத்தில் மாபெரும் பொதுக்கூட்டம், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள 1.8.2023 சென்னையில் திமுக., இளைஞர் அணி செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் அவர்களும், நீலகிரி மாவட்டத்திற்கு செப்டம்பர் மாதத்தில் வருவதாக இசைவு தெரிவித்தார்கள். உடன் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, எப்பநாடு தொரை ஆகியோர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக