கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே விபத்து வாலிபர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே விபத்து வாலிபர் பலி.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே விபத்து வாலிபர் பலி.


கண்ணன்புதூர் பட்டர்குளம் பகுதியை சார்ந்த கருணாநிதி என்பவர் மகன் மோரின்சன். 27 இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலில் இருந்து  
கண்ணன்புதூருகு வந்து கொண்டிருக்கும்போது பட்டர் குளம் திருப்பத்தில் வைத்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.


 இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ்க்கும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கும்  தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மோரின்சனை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர் உடனே ஆரல்வாய்மொழி போலிசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad