பந்தலூர். சேரம்பாடியில் அரசு மேல் நிலைந்பள்ளியில் வைத்து மருத்துவ முகாம் நடைபெற்றது
சேரம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளி தேசிய முற்போக்கு திராவிட கழகநிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மேப்பாடி மூப்பன்ஸ் மருத்துவ கல்லூரி. இந்தியசமுக நலன் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஹாத்திகா ஆப்டிக்கல்ஸ் இனைந்து மருத்துவ முகம் நடத்தினர்.
மேப்பாடி மூப்பன்ஸ் மருத்துவ குழு கூடலூர் பந்தலூர் பகுதியில் தொடர்ந்து பல மருத்துவம் வழங்கி வருகின்றனர் முகாமில் தரமான மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். மேப்பாடி பகுதியில் சிறந்த சிகிச்சை வழங்கி தனக்கென ஒரு நற்பெயரை பெருவதோடு நம்பிக்கையும் பெற்று சிறந்து விழங்கிய மருத்துவ மனை மக்கள் சேவைக்காக பந்தலூர் போன்ற கிராமங்களை நேரடியாக சென்று தன் மருத்துவ சேவை செய்துவருகின்றனர் .இன்னிலையில் சேரம்பாடி பகுதியில் மருத்துவ முகாம் நடத்தினர்..
இந்த நிகழ்ச்சியில் தே மு தி க மாவட்ட துனை செயலாளர் குருநாதன் வந்தோர்களை வரவேற்று பேசினார். பந்தலூர் மேற்கு ஒன்றிய பொருலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார் .தேமுதிக மாவட்ட செயலாளர் பத்மநாதன் .தேமுதிக மூப்பன் மருத்துவ கல்லூரி சூப்பி கல்லங்கோடன் சிறப்புரை ஆற்றினர். மாநில மாற்றுத்திரனாளி அணி செயலாளர் சிவகுமார் வாழ்த்துரைவழங்கினார்.
நிகழ்ச்சியில் சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திரபோஸ் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்னதாஸ்.வார்டு கவுன்சிலர் பார்வதி.போன்றோர் குத்து விளக்கேற்றினர்..
மருத்துவ முகாமில் பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை .காது.மூக்கு.தொன்டை. பெண்கள் பொது மருத்துவம் . தோல் .இதயம். நரம்பு. கண் பரிசோதனை. மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினர்.
இந்த முகாமில் பல்வேறு தரப்பினர் நீன்ட வரிசையில் நின்று சிகிச்சை பயன் பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக