சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளி வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர் கோர்ட்டு வளாகமே பரபரப்பு டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளி வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர் கோர்ட்டு வளாகமே பரபரப்பு டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அல்ஆசிக் (வயது 27). இவர் தனக்கென்று ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அதன் பிறகாக வேடசந்தூரைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி தலைவர் மாரிமுத்து (40) என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி தயார் நிலையில் இருந்த பொழுது போலீசார் கொலை சம்பவத்தை முறியடித்து அருவாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் ஐந்து பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


அதன் பிறகாக வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் இவர் மீது பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானதை அடுத்து அந்த வீடியோவை வெளியிட்டதாக கருதி திண்டுக்கல் சேர்ந்த பட்டறை சரவணன் என்பவரை தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில் அல்ஆசிக் விருதுநகர் கோர்ட்டில் சரணடைந்தார். 


இந்நிலையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திண்டுக்கல் போலீசார் அல்ஆசிக் மீது போக்சோ வழக்கில் ஒரு வழக்கு பதிவு  செய்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மாரிமுத்துவை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாய்தாவிற்காக ஆஜராக வேடசந்தூர் கோர்ட்டிற்கு கொண்டு வருவதாக பட்டறை சரவணன் ஆதரவாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் பட்டறை சரவணனின் ஆதரவாளர்கள் வேடசந்தூர் கோர்ட்டுக்கு வரும் அல்ஆசிக்கை பழி வாங்க போவதாக ரகசிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வேடசந்தூர் போலீசார் பதற்றம் அடைந்தனர். 


இதனை அடுத்து உஷார் அடைந்த வேடசந்தூர் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எரியோடு இன்ஸ்பெக்டர் வேலாயுதம், வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வேல்ராஜ், வேலுமணி, குற்ற தடுப்பு சிறப்பு போலீஸ் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இசக்கிராஜா உட்பட ஏராளமான போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அல் ஆஷிக்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தி மீண்டும் அழைத்துச் சென்றனர். 


இச்சம்பவத்தால் வேடசந்தூர் கோர்ட் வளாகம் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் காணப்பட்டது. பட்டறை சரவணனுக்கு ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட நான்கு நபர்களை வேடசந்தூர் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்திருந்து அழைத்து சென்றதும் அவர்களை விடுவித்ததாகவும் கூறப்படுகின்றது. 


- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad