திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சந்திப்பு 12 ஆகஸ்ட் 2023, சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தனராஜ் தலைமை வகித்தார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பள்ளி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். பின்பு தங்களது ஆசிரியர்களுடன் மகிழ்ச்சி பொங்க குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னாள் தலைமை ஆசிரியர் மேகவர்ணன், தற்போதைய தலைமை ஆசிரியர் தனராஜ், தமிழ் அய்யா, கல்யாணி டீச்சர், பிரேம்குமார் டிராயிங் மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். 1999 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 100% தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள் கவுரவிக்க பட்டனர்.
ஏற்பாடுகளை அரசு உயர்நிலைப்பள்ளி சீவலப்பேரி முன்னாள் மாணவர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக