ஆம்னி பேருந்தின் அநியாய பேருந்து கட்டணம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

ஆம்னி பேருந்தின் அநியாய பேருந்து கட்டணம்


திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு இன்று பல்லாயிரம் கணக்காக பக்தர்கள் ஆங்காங்கே இருந்து  கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.


இதனால் பல இடங்களில் பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். இவ்வகையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்காக பெண் ஒருவர் METRO LINK TOURS &TRAVELS   எனும் ஆம்னி பேருந்தில் ஏறி உள்ளார்.


அவரிடம் ஏசி இருக்கை மற்றும் கட்டணம் 200 ரூபாய் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய பெண்மணி பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்து சிறிது மிக தூரம் தாண்டியதும் கூட்டம் அதிக அளவில் ஏறியதால் பயணித்து கொண்டு வந்த பெண்மணியை ஏசி இல்லாத கடைசி இருக்கையில் அமரக் கூறியுள்ளனர் மற்றும் கட்டணம் 800 ரூபாய் கொடுங்கள் என கேட்டுள்ளனர். 


அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி 200 ரூபாய் என கூறிவிட்டு இவ்வளவு கேட்கிறீர்களே மற்றும் ஏசி இல்லாத இருக்கையில் இருக்க கூறுகிறீர்களே என கேட்டுள்ளார். இதற்கு அப்ப பேருந்தின் நடத்துனர் 800 ரூபாய் பணம் தாருங்கள் மற்றும் கடைசி வரிசையில் அமருங்கள் இல்லையெனில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாதி வழியில் பேருந்து நிறுத்தி இறங்கி விடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் பெரிதும் மன உளைச்சல் அடைந்த பெண்மணி 800 ரூபாய் பணத்தினை கொடுத்து திருவண்ணாமலை  பயணித்து   வந்துள்ளார்.


அப்பெண்மணி நிம்மதிக்காக கோவிலுக்கு வந்தேன் ஆனால் என்னால் நிம்மதியாக கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் நடக்க கூடாது என எண்ணுகிறேன். எனவே இவ்வாறு செய்த ஆம்னி பேருந்து நிர்வாகத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/