எட்டையாபுரத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி தளவை ராஜாவின் ஆவின் பாலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் குத்து விளக்கேற்றி, விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தலைமை வகித்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஆவின் சேர்மன் சுரேஷ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சௌந்தரராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M.R முனியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக