திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு டி.பாஸ்கர் பாண்டியன் அவர்களின் தலைமையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஏலகிரிமலை ராயனேரி பகுதியில் 3 கோடி மதிப்பீட்டில் சூழலியல் சுற்றுலா (Eco Tourism), படகு இல்லம், இயற்கை பூங்கா, நிலாவூர் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா அமைக்கும் இடம் என பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு ஏலகிரிமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்த கலந்தாலோசித்தார்.
இந்நிகழ்வுகளில் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, திட்ட இயக்குனர் கு.செல்வராசு, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சாந்திசீனிவாசன், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதீஷ்குமார், நகர செயலாளர் ம.அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் கவிதா தண்டபாணி, கே.சதிஷ்குமார், ப.ச.சுரேஷ்குமார், கே.ஆர்.திருப்பதி, எஸ்.தாமோதிரன், கே.முருகேசன், டி.அசோக்குமார், பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் செ.வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக