தன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் சினிமா பாணியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-மாலை நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பாக ரீல்ஸ் என்ற பெயரில் அலப்பறையில் ஈடுப்பட்ட காதலர்கள், இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் நின்ற பொதுமக்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது, இதற்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அண்ணா பேருந்து நிலையத்தில் செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கே பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய போலீசாரே இதனை கண்டு கொள்ளாமலும் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதும் வேடிக்கையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக