கோவையில் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

கோவையில் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் தடாகம் சாலையில் லாலி  ரோட்டில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டு 58வது வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 17ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து 30 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



பின்பு ஒண்ணாம் தேதி பௌர்ணமி பூஜையும் அதனை தொடர்ந்து கரகம் மற்றும் சாமி அழைப்பு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வாக 48 கிடாய்கள் மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டன அதனை தொடர்ந்து நேற்றைய தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.


திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயனின் அருள் பெற்று ஐயனின் அருள் பிரசாதமான அன்னதானத்திலும் கலந்து கொண்டனர் திருவிழாவை ஒட்டி அங்கு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad