புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோவில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மழை வேண்டியும், ஊர் ஒற்றுமைக்காகவும் திருவிளக்கு பூஜை நடைபெறும். அதேபோன்று இவ்வாண்டும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர். பாலாஜி குருக்கள் தலைமையில் வேத மந்திரம் முழங்க திருவிளக்கை ஏற்றி பெண்கள் குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக