இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் ஆர்.காந்தி சிறப்புரை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் ஆர்.காந்தி சிறப்புரை.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நாவலாக் ஊராட்சி, திருவள்ளூர் நகர், புளியங்கண்ணு  கிராமம் ஆகிய பகுதிகளில் புதிய நியாய விலை கட்டிடம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  2-வகுப்பறை பள்ளி கட்டிடம், புதிய அங்கன்வாடி மையக்  கட்டிடம், நெற்களம், நாடக மேடை கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.


இதில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி, தலைமை செயற்குழு உறுப்பினர் கா. சுந்தரம், மாவட்டத் துணைச் செயலாளர் குமுதா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் SLS.தியாகராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், மணியம்பட்டு தலைவர் மோகன், தெங்கால்  தலைவர் பத்மநாபன், ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி ஸ்ரீதர், மாதவி தங்கராஜ், இந்திரா பாபு, சங்கீதா சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் படியம்பாக்கம் ராதாகிருஷ்ணன், செங்காடு சாரதி மற்றும்  கழகத்தினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad