நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சிட்டுக்குருவிக்கு கூடு அமைக்கும் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சிட்டுக்குருவிக்கு கூடு அமைக்கும் விழா!

 


ஊட்டியில் சிட்டுக்குருவிக்கு கூடு அமைக்கும் விழா!

மனிதர்களுக்கு பல்வேறு நோய்களுக்கு காரணமான கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம். கொசு முட்டை, புழு, கொசுக்களையும் சிட்டுக்குருவிகள் உணவாக உட்கொள்கின்றன.


முந்தைய காலத்தில் ஒவ்வொருவரும் காலையில் விழிக்க சேவலுக்கு அடுத்து சிட்டுக் குருவிகளே அலாரமாக உதவி வந்தன. கீச் கீச் என்ற அந்த இசையை கேட்டு விழிக்கையில் இதமாகவும், புத்துணர்வுடனும் நாள் பொழுது துவங்குகிறது. சுறுசுறுப்புக்கும் பெயர் போனது சிட்டுக்குருவி


சிட்டுக் குருவிகள் நம்முடன் வாழும் ஒரு அற்புத படைப்பு. அவற்றை பெருக்க இயற்கை முறையில் விவசாயம் செய்வது சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


சிட்டுக்குருவி இயல்பாக மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாகவே இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.


இதை தடுக்கும் வகையில் சமுக அமைப்புகள் பல்றேு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன


இதன் ஒரு பகுதியாக நீலகிரிமாவட்டம் உதகை திருகாந்தல் மடத்தில் பேரூராதீனம் திருபெருந்திரு சாந்தலிங்க மருத்தாசல அடிகளார் அவர்களால்


சிட்டுக்குருவிக்கு கூடு அமைக்கும் தொடங்கி வைக்கப்பட்டது. கோவை சிட்டுக்குருவி ஆர்வலர்  பாண்டியராஜன், நித்யானந்தபாரதி அவர்கள் விழாவை சிறப்பித்தனர்.


உடன் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு  அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad