கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் செல்லும் சாலையில் மத்தூர் ஒன்றியம் பெரியஜோகிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது இக்கிராமத்தில் தொடர்ந்து அடிக்கடி விபத்துக்கள் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விட்டு சென்று விடுகின்றன இதனால் பல உயிர்கள் பலி கொண்டுள்ளன இதற்கு நேற்று இரவு ஊத்தங்கரையிலிருந்து மத்தூர் சென்று கொண்டிருந்த இரு வாலிபர்கள் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலே உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக இக்கிராமத்திலிருந்து நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி உயிர் பலியாகிறது பலமுறை செய்தித்தாள் மூலம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க மிகவும் அச்சமடைந்து வருகிறார்கள் எனவே உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டு இங்கு பேரிகார்டு அமைத்து பள்ளி மாணவர்கள் ஏதுவாக சாலையை கடக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் இந்த சாலையில் அதிகமாக வாகனங்கள் கடந்து செல்வதால் பொதுமக்கள் சாலையை கடப்பதும் சிரமமாக உள்ளது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமா??
மாவட்ட நிர்வாகம் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பெருமக்களும் எதிர்பார்ப்பு???
-கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக