தேனி மாவட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

தேனி மாவட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாம்

தேனி மாவட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாமினை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்



தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949-ஆம் ஆண்டு துவங்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சி முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும். தற்போது                        இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.


மேலும் TIIC நிறுவனம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது. (Lending Plus Service Provider to MSMEs).
TIIC திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் (முகவரி : பிளாட் எண்.2 பாண்டியன் நகர் முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில் திண்டுக்கல். 624 001) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 21.08.2023 முதல் 01.09.2023 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. (TIIC) யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள்                         (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. 
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்  திட்டத்தின் (AABCS) கீழ் SC/ST தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35% முதலீட்டு மானியம் மற்றும் 6% வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். 
இந்த அரிய வாய்ப்பினை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்      திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad