சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அரசு மின் பகிர்மான கழகம் அருகே அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனமும் ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கழனிவாசலைச் சேர்ந்த சுப்பையா மகன் ராஜா (வயது 38) என்பவர் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார்., இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 108 ஆம்புலன்யை தொடர்பு கொண்ட பொழுது காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் தற்போது உடனடியாக அனுப்பி வைக்கும் சூழ்நிலை ஆம்புலன்ஸ்கள் இல்லை எனவும் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரிமளத்தில் இருந்து ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளதாகவும் 108 உதவி அழைப்பில் கூறிய நிலையில் காயமுற்ற நபருக்கு ரத்தப்போக்கு அதிகமாவதை தொடர்ந்து அருகிலிருந்த சரக்கு வாகனத்தில் ஏற்றி பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் உதவியோடு காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது., மேலும் இந்த கோர சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் விபத்துக்கு முக்கிய காரணமாக அங்கு அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் எவ்வித ரிப்ளைட்டர்களும் இல்லாததனால் இரவு நேர வாகன ஓட்டிகளுக்கு அந்த வேகத்தை சரியாக தென்படுவதில்லை எனவும் இது போன்ற விபத்துக்கள் தொடர்ச்சியாக அவ்வப்போது நடந்து வருவதாகவும் இந்த வேகத்தடையில் தகுந்த முன்னெச்சரிக்கை பதாகைகள் மற்றும் ரிப்ளைக்டர்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக