திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிகளில் சாலையில் ஏராளமான ஆடு, மாடுகள் சுற்றித் திரிகின்றன.
அவற்றில் சில மாடுகளும் கன்று குட்டிகளும் சாலையிலேயே படுத்து விடுகின்றன. இதனால் ஏராளமான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் இன்று வேடசந்தூரிலிருந்து மாரம்பாடி செல்லும் சாலையில் 2 கன்று குட்டிகள் நடுரோட்டில் படுத்திருந்தன.
இதனால் அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் ஓரமாக ஒதுங்கி சென்றனர்.
அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் கன்று குட்டிகள் படுத்திருப்பது தெரியாமல் வேகமாக வந்தார்.
திடீரென்று கன்று குட்டிகள் படுத்திருப்பதை பார்த்த அவரால் மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியவில்லை. இதனால் அவர் கன்றுக்குட்டியின் மீது ஏற்றி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டார்.
அதிர்ஷ்டவசமாக அந்த நபர் காயங்களின்றி உயிர் தப்பினார்.
சாலையில் படுத்து இருந்த கன்று குட்டியும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியது.
வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக சாலையோரம் கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக