நெமிலி அடுத்த உளியநல்லூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா! . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

நெமிலி அடுத்த உளியநல்லூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா! .

நெமிலி அடுத்த உளியநல்லூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் ரூ. 31 லட்சம் மற்றும் புதிய அங்கன்வாடி மையம் ரூ. 13 லட்சம் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா! 


ராணிப்பேட்டை மாவட்டம்  நெமிலி அடுத்த உளியநல்லூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர். ஜீவா சதாதிவம் அவர்கள் தலைமையில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான . சுந்தரம்மாள் பெருமாள் அவர்கள் முன்னிலையில், ஒன்றிய குழு உறுப்பினர். கௌரி வேலாயுதம் வரவேற்பில் நடைப்பெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். ஏ.எம்.முனிரத்தினம் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் எஸ்.ஜி.சி.பெருமாள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள். ரவி, பிரபாகரன், பா.செ.நரசிம்மன், அ.சீனிவாசன், சரளா முரளி, சம்பத், ரவிச்சந்திரன், மணி, ஜெயக்குமார், நந்தகுமார், கீழ்வீதி பாலாஜி, வேலு மேஸ்திரி, ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad