காரியாபட்டியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

காரியாபட்டியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பாக, ரத்ததான முகாம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் ரியாஸ் தலைமை வகித்தார்.   மாவட்ட துணைத்  தலைவர் அக்பர் அலி, பொருளாளர் ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரியாபட்டி போலீஸ்  சப்.இன்ஸ்  பெக்டர் பிச்சைப்பாண்டி முகாமினை, தொடங்கி  வைத்தார்.  


முகாமில், அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ குழுவினர் 50 நபர்களிடம் ரத்தம் சேகரித்தனர். முகாமில், தவ்ஹித் ஜமாத்  காரியாபட்டி கிளை தலைவர் சபீர், செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் ஷாஜகான், துணை செயலாளர் சம்சுதீன், துணைத்  தலைவர் இஷாக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad