விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் நீதிமன்றம் இயங்குவதற்கு தற்காலிகமாக இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, காரியாபட்டி கே. செவல்பட்டியில் பேரூராட்சி சமுதாய கூடத்தில், நீதிமன்றம் இயங்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தது. அதன்பேரில், சமுதாய கூட கட்டிடத்தை நீதிமன்ற அமைப்பதற்கான கட்டிட விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெறுகிறது. கட்டிட பணிகளை, பேரூராட்சி சேர்மன் செந்தில், செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
Post Top Ad
திங்கள், 25 செப்டம்பர், 2023
காரியாபட்டியில் நீதிமன்றம் இயங்குவதற்கு தற்காலிகமாக இடம் தேர்வு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக