பாலமேடு அருகே அய்யனார் கோவிலில் பொங்கல் திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

பாலமேடு அருகே அய்யனார் கோவிலில் பொங்கல் திருவிழா

பாலமேடு அருகே அய்யனார் கோவிலில் பொங்கல் திருவிழா



மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி, சல்லிக் கோடாங்கிபட்டியில் ஸ்ரீ பூந்தலை கொண்ட அய்யனார் திருக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் முதல் நாள் உலக மக்களின் நன்மை வேண்டியும், மழை வேண்யும்,விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரண்டாம் நாள் நேற்று பொங்கல் வைத்து நூற்றி ஒரு படையல் இட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை வலையபட்டி,சல்லிக் கோடாங்கிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad