குளச்சல் : குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:- தமிழக முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டா லின் தேர்தல் வாக்குறுதிப்படி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 வழ ங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இது ஏழை, எளிய பெண்கள், உழை க்கும் இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தை நடத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் பெண்கள் பயனடைகின்றனர். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு தான் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்களின் செல்போ னுக்கு குறுஞ்செய்தி வரவி ல்லை. மகளிர் உரிமை தொகை கிடைக்கா தவர்கள் குழப்ப மடைந்து ள்ளனர். தகுதி யானவர்களுக்கு கிடைக்கா ததால் பீதியடைந்துள்ளனர். இவர்கள் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கு குறித்து வி பரம் கேட்கும் நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் வங்கிகளில் கூட்டம் கூடு கிறது. தொ கை கிடைக்கா தவர்கள் இன்று முதல் ஒரு மாதத்தி ற்குள் மேல் முறையீடு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து ள்ளார். மேல் முறையீட்டில் தகுதி உள்ள விண்ணப்ப ங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு உரிமை தொகை வழங்க வேண்டும். தொழி லாளர் நல வாரியத்தில் சேர்ந்தவர்கள், விதவை பென்சன் வாங்கு பவர்க ளின் விண்ணப்ப ங்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தொகை பெற விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் பெண்களின் சமூக நீதி காப்பாற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக