தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசிற்கு ஓ. சண்முகசுந்தரம் கோரிக்கை: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசிற்கு ஓ. சண்முகசுந்தரம் கோரிக்கை:

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசிற்கு ஓ.சண்முகசுந்தரம் கோரிக்கை:



தேனி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும். அதிக அளவில் சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டமும் ஆகும். இங்கு ஹைவேவிஸ்,மேகமலை,சுருளி அருவி, வீரபாண்டி,வைகை அணை,சோத்துப்பாறை அணை, மஞ்சளார் அணை, கும்பக்கரை அருவி,உள்ளிட்ட இன்ன பிற சுற்றுலா தளங்கள் உள்ளன. கோடை காலங்களில் மட்டும் அல்லாது  வருடத்தின் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து தங்கி மகிழ்ந்து இயற்கையை ரசித்து செல்லும் விதமாக இம்மாவட்டம் காணப்பட்டு வருகின்றது. இருப்பினும் வைகை அணை, கும்பக்கரை அருவி,  சுருளி அருவி, போன்றவை சுற்றுலா பயணிகள் அதிகம் கண்டு ரசிக்கும் பகுதியாக இருந்து வருகின்றது. இப்பகுதிகளில் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு அணை பராமரிப்பு,பூங்கா பராமரிப்பு,அருவி பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து, இப்பகுதிகளில் புற காவல் நிலையம் அமைத்தும்,  பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் விதமாக  செயல்பாட்டில் கொண்டுவந்து சுற்றுலா பயணிகள் மூலம் தமிழக அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஏற்படுத்திடவேண்டும் எனவும், மஞ்சளாறு அணை, மற்றும் சோத்துப்பாறை அணை பகுதிகளில் சிறுவர் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாக மாற்றி அணைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பெரியவர்கள், சிறியவர்கள், மற்றும் பொதுமக்கள் இயற்கையோடு இணைந்து விளையாடி மகிழும் வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பிளாக்தண்டர், அதிசயம், போன்றவற்றில் உள்ளவாறு நீர் சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உயர்தர வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக இம் மாவட்டத்தை மாற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் தமிழக அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பெரியகுளம் நகர் கழக துணைச் செயலாளரும், அஇஅதிமுக பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர்கள் குழு தலைவரும், பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினருமான ஓ. சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad