அழகப்பாபுரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை P.T.செல்வகுமார் வழங்கினார்.
கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பும், பொது தேர்வில் சிறந்து விளங்கிய மானவர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்வு அழகப்பாபுரம்- நிலப்பாறை சாலைக்கு கீழ்ப்பக்கத்தில் உள்ள P.T.S. நகரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T.செல்வகுமார் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினார். அழகப்பாபுரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 10,11,12ஆம் வகுப்புகளில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கும், சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
இலக்கிய பிரிவு தலைவர் காபிதுரை, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் செந்தில் மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். நிகழ்வில், மருத்துவர் கௌதம், வர்த்தக அணி தலைவர் விஸ்வை சந்திரன், மீனவர் அணி தலைவர் ஜோசப் கென்னடி, மகளிர் அணி தலைவி வரலட்சுமி, ஆசிரியர் பிரிவு தலைவர் ஜேம்ஸ் சந்திரகுமார், துணை தலைவர் முத்துக்குமார், துணைச் செயலாளர் விஸ்வை பாலகிருஷ்ணன், பவுல்டன், செந்தில், மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக