நெல்லிக்குப்பம் ஊராட்சியில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 அக்டோபர், 2023

நெல்லிக்குப்பம் ஊராட்சியில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சி வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாபேட்டை மற்றும் கருமாரியம்மன் கோவில், பவானி அம்மன் கோவில்  என நான்கு இடத்தில் பூத் வாக்குச்சாவடி திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் தலைமையில் நடைபெற்றது. 


கூட்டத்தில் மாவட்ட திமுகவின் பிரதிநிதி என்ஜி கெஜராஜன் மற்றும் பூத் எண் 93, அவைத் தலைவர் டி மோகன் பிஎல்ஏ. 2 , பூத் எண் 94, ஆர்.பார்த்திபன் பிஎல்ஏ .2, பூத் எண் 95,பி. அரிகிருஷ்ணன் பிஎல்ஏ.2 ,ராஜவேலு பிஎல்எ. 2, இவர்கள் அனைவரும் வரவேற்பினை  அளித்தனர். மேலும் இந்த செயல் வீரர்கள் கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் வெண்ணிலா நந்தகுமார் மற்றும் கிளைச் செயலாளர் எம்ஜி மோகனரங்கன் இவர்கள் முன்னிலையில் மாவட்ட கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட கழக பிரதிநிதி பா ஞானபிரகாசம் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெல்லிக்குப்பம் ஊராட்சியில் உள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு  நிர்வாகிகளுக்கு 2024 தேர்தலின் முன்னிட்டு மக்களிடம் வாக்குகளை எந்த முறையில் சேகரிக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.


இதில் நெல்லிக்குப்பம் ஊராட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் இளைஞர் அணி மகளிர் அணி ஆகிய நிர்வாகிகள் பங்கேற்றனர் கூட்டம் முடிவில் கிளை இளைஞரணி செயலாளர்கள் பூபதி கோவிந்தன் முருகன் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி  தெரிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad