நிரம்பி வழியும் நரேந்திர மோடி மைதானம்.. எங்கு பார்த்தாலும் நீலம் - ஆர்ப்பரிக்கும் இந்திய ரசிகர்கள்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

நிரம்பி வழியும் நரேந்திர மோடி மைதானம்.. எங்கு பார்த்தாலும் நீலம் - ஆர்ப்பரிக்கும் இந்திய ரசிகர்கள்!

நிரம்பி வழியும் நரேந்திர மோடி மைதானம்.. எங்கு பார்த்தாலும் நீலம் - ஆர்ப்பரிக்கும் இந்திய ரசிகர்கள்!



உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


நரேந்திர மோடி மைதானம்:


உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். அதன்படி, முதல் போட்டி அங்கு தான் நடைபெற்றது.


ஆனால், அன்றைய போட்டி நடைபெற்ற நாளன்று நரேந்திர மோடி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரம், அனைத்து டிக்கெட்டுகளையும் விற்றுவிட்டதாக கூறிய ஐசிசி-யை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில், "மைதனாம் வெறிச்சோடி காணப்படுகிறது. யாருக்குத் தான் டிக்கெட்டுகளை விற்றீர்கள்" என்று விமர்சனம் செய்தனர். மறுபுறம் குஜராத் கிரிக்கெட் சங்கம் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் போது நிச்சயம் மைதானம் நிரம்பி வழியும் என்று கூறியிருந்தது.


நீல நிறத்தில் நிரம்பி வழியும் மைதானம்:


இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று (அக்டோபர் 14) நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.


அதன்படி, போட்டி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். இந்த போட்டியை காண்பதற்காக ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றிருக்கிறார்கள். இதனிடையே, மைதானம் முழுவதும் காலை முதலே நிரம்பத்தொடங்கியது.


கடந்த போட்டியின் போது கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட இந்த மைதானம் இன்றைய போட்டியில், "நீல நிறத்தில்" நிரம்பி வழிகிறது.


பாகிஸ்தான் அணியின் பச்சை நிற ஜெர்சியை மைதானத்தில் காண்பதே அரிதாக இருக்கிறது. ஆனால், இந்திய ரசிகர்களால் மைதானமே தற்போது திருவிழா கோலம் பூண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/