ஆத்தூர் - தனியார் ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 அக்டோபர், 2023

ஆத்தூர் - தனியார் ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து கோவைக்கு எஸ்.பி.எஸ். டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. பேருந்து புறப்படும்போது பேருந்தின் இடது புறம் உள்ள லக்கேஜ் டோர் சரியாக மூடப்படாமல் இருந்ததால் வழிநெடுக நான்கு பேர் மீது மோதியதில் இருவர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.


அதன்படி ஆத்தூர் அருகேயுள்ள நரசன்விளை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிவனைந்த பெருமாள் மகன் சுப்பையா (வயது 70) என்பவர் மீது லக்கேஜ் டோர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


அதைத்தொடர்ந்து மேலஆத்தூர் குச்சிக்காடு கந்தசாமி மகன் செந்தில்குமார் (43) என்பவர் தெற்கு ஆத்தூர் பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது அடுத்து மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார். 


அதைத் தொடர்ந்து தெற்கு ஆத்தூர் கீழத்தெருவை சேர்ந்த சிந்தா மகன் சாகுல்ஹமீது (43) என்பவர் மீது மோதியதில் இடது தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்துள்ளார்.


அதை அடுத்து வடக்கு ஆத்தூர் உதயம் ஹோட்டல் முன்பு பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த மேலஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த பலவேசம் மகள் பிரியதர்ஷினி (23) மீது மோதியதில் தலையில் அடிப்பட்டு அவரும் காயமடைந்தார். 


தகவலறிந்து வந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். விசாரணை செய்ததில் அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தியது எஸ்.பி.எஸ். டிராவல்ஸ் தனியார் பேருந்து என்பதை உறுதி செய்தனர்.


இதைத்தொடர்ந்து அப்பகுதியை ஆய்வு செய்தபோது இருவர் உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுத்தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஆறுமுகநேரி அருகேயுள்ள நல்லூர் நாககன்னியாபுரம் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் மகேஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/