தமிழ்நாடு நாடார் சங்கம் கொங்கு மண்டலம் கோவை மாநகர மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் அவர்கள் அறிவுறுத்தலின்படி மண்டல தலைவர் எஸ் பழனிச்சாமி நாடார் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகர மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்தும் உறுப்பினர் சேர்க்கை பற்றியும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நாடார் சங்கம் பொதுச் செயலாளர் ஆனைகுடி செ வீரகுமார் நாடார் தலைமை நிலைய செயலாளர் வ.சி.பொன்ராஜ் நாடார் கொள்கை பரப்புச் செயலாளர் அ.சே.சுரேஷ்மாறன் நாடார் அமைப்பு செயலாளர் கூடல் ஆனந்தன் நாடார் செயலாளர் ப.இளையராஜா நாடார் கொள்கை பரப்புச் துணை செயலாளர் மேக பேச்சிராஜன் நாடார் இளைஞர் அணி தலைவர் பாஸ்கர் நாடார் மகளிரணி துணை தலைவி அன்புக்கரசி துணை செயலாளர் பா.கண்ணன் நாடார் இளைஞர் அணி துணை தலைவர் ஜெயகிருஷ்ணன் நாடார். கொங்கு மண்டல பொதுச் செயலாளர் இள.அருண்மொழி சோழன் நாடார் துணை செயலாளர் திருமலை ராஜா நாடார் கொங்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி ராமஜெயம் இளைஞர் அணி தலைவர் அன்புஜோதி நாடார் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர மாவட்டம் செயலாளர் முருகன் நாடார் இளைஞர் அணி தலைவர் மலை சதீஷ் நாடார் சமூக வலைதள அணி துணை செயலாளர் முத்துகிருஷ்ணன் நாடார் சேலம் மாவட்டம் பொதுச் செயலாளர் குழந்தைராஜ் நாடார் கோவை புறநகர் மாவட்டம் தலைவர் மைக்கேல் ஸ்லேட்டர் நாடார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக