சேத்தியாத்தோப்பில் ராம் தேவி மருத்துவமனை மற்றும் பாண்டி மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

சேத்தியாத்தோப்பில் ராம் தேவி மருத்துவமனை மற்றும் பாண்டி மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

சேத்தியாத்தோப்பு ராம்தேவி மருத்துவமனை 11 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் மற்றும் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை சார்பில் சேத்தியா தோப்பில் உள்ள விஜய கணேசர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் 178 நபர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 24 நபர்களுக்கு கண்புரை கண்டறியப்பட்டு அவர்கள் மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவசமாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. 


கண் சிகிச்சைமுகாமை ராம்தேவி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரணிதரன் துவங்கி வைக்க, முகாம் ஏற்பாடுகளை சேத்தியாத்தோப்பு நகர அரிமா   சங்கத்தலைவர் சத்யா டிஜிட்டல் சௌந்தர்ராஜன், கடலூர் மாவட்டத் தலைவர் டாக்டர் மணிமாறன், அரிமா.அன்பழகன், அரிமாவேணுகோபால், சாரதா ஸ்டுடியோதில்லை உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad