தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 36-வது நினைவு நாளில், தனது திரைப்படத்திற்கு "எம்.ஜி.ஆர் ரசிகன்" என பெயர் சூட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 டிசம்பர், 2023

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 36-வது நினைவு நாளில், தனது திரைப்படத்திற்கு "எம்.ஜி.ஆர் ரசிகன்" என பெயர் சூட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி.


சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி பல்வேறு சமுதாய "விழிப்புணர்வு குறும்படங்கள்" மற்றும் "முதல் மாணவன்", "வைரமகன்", "வீரக்கலை" ஆகிய "கருத்து" திரைப்படங்களையும் கதை எழுதி, தயாரித்து, நடித்து, வெளியீடு செய்துள்ளார்.  நான்காவது திரைப்படமாக  "உச்சம் தொடு" என சர்வதேச விளையாட்டு வீரரின் வாழ்வியலில் கோபி காந்தி தயாரித்து, நடித்து வருகிறார். தொடர்ந்து ஐந்தாவது திரைப்படமாக உலக புகழ் பெற்ற தலைவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ரசிகனாக கோபி காந்தி முதல் முறையாக இயக்கி, நடிக்க உள்ளார். அத்திரைப்படத்தின் பெயரை எம்.ஜி.ஆர் 36-வது நினைவு நாளில்  "எம்.ஜி.ஆர் ரசிகன்" என பெயர் சூட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

இது குறித்து கோபி காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது. எம்.ஜி.ஆர் சிறு வயதில் உணவிற்காக நாடக கொட்டகையில் வேலைக்கு சேர்ந்து அதன் மூலம் உயர்ந்த நடிகரானார். ஏழை, எளிய மக்களின் நன்மைக்காக அறக்கட்டளையை தோற்றுவித்து அவர் சம்பாதித்த பணம் அனைத்தையும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார். அரசாங்கம் மூலம் மக்களுக்கு நன்மை செய்வதற்காக அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை நிறுவினார். அதன் மூலம் ஏழை, எளிய, பொது மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்தார். 

இன்றும் எம்.ஜி.ஆர் நிறுவிய காரணத்திற்காக மக்கள் அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவளித்து வருகிறார்கள். உண்மையாக நடப்பவர்களுக்கு எம்.ஜி.ஆர்-ன் ஆசிர்வாதம் மூலமாக கண்டிப்பாக நன்மை  நடக்கும், எம்.ஜி.ஆர் மறைந்து முப்பத்து ஆறு வருடங்களாகியும் இன்றும் உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் கோடிக்கணக்கான ரசிகர்கள்  இருக்கிறார்கள். அவர்களை போல் நானும் எம்.ஜி.ஆர்-ன் தீவிர ரசிகன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அன்றும் அவரைப்பற்றி கதை எழுதி திரைப்படத்தை இயக்குவார்கள். எம்.ஜி.ஆர் இருந்தாலும், மறைந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவர், அவர் சம்பாதித்த அனைத்தையும் மக்களுக்காகவே வழங்கி சென்றார், சினிமா, அரசியல் இரண்டிலுமே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினார். 


ஆகையால் இரண்டிலும் மக்கள் அவர் மீது அளவு கடந்த பாசம் கொண்டனர், அப்படிப்பட்ட உயரிய தலைவரின் ரசிகனாக நடிப்பதற்காக பல எம்.ஜி.ஆர் ரசிகர்களை சந்தித்து  அவர்களிடம் உள்ள சுவாரஸ்யங்களை சேகரித்து கதை எழுதி வருகிறேன். அவரது நினைவு நாளில் படத்தின் பெயர் வைக்க முடிவு செய்து எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான 7 எழுத்தில்  "எம்.ஜி.ஆர் ரசிகன்" என பெயர் சூட்டி உள்ளேன். அனைவருக்கும் பிடிக்கும் விதமாக படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு திரைப்பட பெயர் சூட்டு விழா செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர், கதாசிரியர், நடிகர் கோபி காந்தி பேசினார். விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் குமரன் ஜீ, எடிட்டர் கோகுல் கிருஷ்ணா பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/