சென்னை அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் தமிழக முழுவதும் ஹஜ் பயணிகளிடம் பல கோடி மோசடி; நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 டிசம்பர், 2023

சென்னை அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் தமிழக முழுவதும் ஹஜ் பயணிகளிடம் பல கோடி மோசடி; நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை.


சென்னை ராயப்பேட்டை கரீம் ஜூபேதர் தெருவில் இயங்கி வரும் அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் இதன் உரிமையாளர் சாதிக் பாட்சா இவரின் கம்பெனிக்கு மத்திய மாநில அரசு அங்கீகாரம் இல்லை இவர் 2023 இந்த வருடம் நூற்றுக்கணக்கான மக்களிடம் பல கோடி ரூபாய் புனித ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றி உள்ளதாக தமிழகத்தில் தென்காசி, தூத்துக்குடி, சென்னை, கடலூர், சீர்காழி மற்றும் பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்.

 

அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர்சாதிக் பாட்சா.
இவர் இதே இடத்தில் 15 ஆண்டுகளாக பல்வேறு பெயர்களில் ஹஜ் நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன் பெயர்கள் தார் அல் முன்தஹா, அர் ரஹீம் ஹஜ் உம்ரா சர்வீஸ், அத் தவ்பா ஹஜ் சர்வீஸ், தார் அல் முன்தஹா டூர்ஸ் அன்டு டிராவல்ஸ், தற்போது அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடந்து வருகிறது. இவர் நடத்தும் நிறுவனங்கள் எதற்கும் ஜிஎஸ்டி செலுத்துவதில்லை மற்றும் இவரிடம் வரும் வாடிக்கையாளர் யாருக்கும் முறையாக பில்லும் தருவதில்லை. இவர் கடந்த 2019 முதல் 2023 வரை பல்வேறு இஸ்லாமிய மக்களை புனித ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக கூறி தமிழக முழுவதும் வசூல் வேட்டை செய்து ஏமாற்றுவது வழக்கமாக வைத்து வருகிறார். 

இவரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் காவல்துறைக்கு சென்று புகார் அளிக்கவும் பயந்து வருகின்றனர். அதையும் மீறி ஒரு சிலர் புகார் அளித்தாலும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். இது சம்பந்தமாக சென்னை சேர்ந்த பாதிக்கப்பட்ட சமீருதீன் என்பவரிடம் கேட்டபோது, "நான் இந்த வருடம் 2023 புனித ஹஜ் பயணம் செல்வதற்கு அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் தொடர்பு கொண்டு கேட்டபோது (ரூ.6,70,000/-) ஆறு லட்சத்து எழுபதாயிரம் ஆகும் என்று கூறினார்கள். அதன்படி நானும் அவர்களது அலுவலகத்தில் வைத்து அவர்கள் கூறிய பணத்தை செலுத்தினேன் பிறகு என்னை ஹஜ் பயணம் அழைத்துச் செல்லாமல் ஏமாற்றி விட்டனர்.


இதை அறிந்து நான் அவர்களிடம் பணத்தை கேட்கும் போது இன்று நாளை காலம் தாழ்த்தி வந்தனர். ஆகையால் நான் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன் புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் வாகிதாபானு அவர்கள் என்னை அழைத்து மூன்று மாதத்தில் சாதிக் பாஷா உங்களுக்கு பணத்தை திருப்பி தந்து விடுவார் என்று சாதிக் பாஷா சாதகமாக பேசி என்னிடம் எழுதி வாங்கி அனுப்பி விட்டனர்.இதனால் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டு மீண்டும் எனது பணத்தை மீட்டுத் தரக் கூறி தமிழக முதல்வருக்கு புகார் ஒன்று அனுப்பி உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார். 

பின் 2019 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட ஆத்துரை சேர்ந்த அமீர் அவர்களிடம் கேட்டபோது 2019 ஆம் ஆண்டு  என் தாயும் தந்தையும் புனித ஹஜ் பயணம் அனுப்ப ஆசைப்பட்டேன் ஆனால் எங்களை அழைத்துச் செல்லாமல் ஏமாற்றி விட்டார் சாதிக் பாட்சா ஆகையால் சாதிக் பாஷா அவர்கள் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் என்று அமீர் அவர்கள் கூறினார். இந்த மோசடி சம்பந்தமாக அந்த பகுதி ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு நமது நிருபர் கேட்டபோது புகாரின் பேரில் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 


மீண்டும் 2024ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணத்திட்ட அறிவிப்பை அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது, அரசு உடனடியாக இந்த நிறுவனத்தில் தணிக்கை செய்து, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பணத்தினை திரும்ப பெற்றுக்கொடுக்க காவல்துறைக்கு அணைபிறப்பிக்க வேண்டும் என இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட இசுலாமியர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/