தூத்துக்குடி - சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 மதுபாட்டில்கள், ரொக்கபணம் ரூபாய் 14,820/- மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஜனவரி, 2024

தூத்துக்குடி - சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 மதுபாட்டில்கள், ரொக்கபணம் ரூபாய் 14,820/- மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், ஜன.17, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 மதுபாட்டில்கள், ரொக்கபணம் ரூபாய் 14,820/- மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் பறிமுதல்.



நேற்று (16.01.2024) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார்.



அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில்  நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 586 மதுபாட்டில்கள், ரொக்கபணம் ரூபாய் 14,820/-ம் மற்றும் ஒரு இருச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad