பொங்கல் விழா போட்டியினை நாகர்கோவில் மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்* - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஜனவரி, 2024

பொங்கல் விழா போட்டியினை நாகர்கோவில் மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்*

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செண்பகராமன்புதூர் இலந்தை இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில்  பொங்கல்விழா, மாட்டு வண்டி போட்டி ஆகியவை நடைபெற்றது. விழாவில், தட்டுவண்டி, வில்லுவண்டி ,சிறிய தட்டுவண்டி என மூன்று பிரிவுகளில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் பங்கேற்றன.போட்டியில் பங்கேற்ற காளைகள் சிறீப்பாய்ந்தது பார்வையாளர்களை உற்சாகபடுத்தியது இந்த போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad