நாளை‌ அனுமன் ஜெயந்தி ஒரு பார்வை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஜனவரி, 2024

நாளை‌ அனுமன் ஜெயந்தி ஒரு பார்வை.


நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி. மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அமாவாசையன்று  சிவபெருமானின்  உருத்திர அம்சமாக அவதரித்தார்  வாயுபுத்திரர். அனுமன்.  அனுமனின் ஆதர்ஷ நாயகன் ஶ்ரீராமர். ராம்_ராம் எனத்  துதிக்கப்படும் இடங்களில், இராமாயணம்  வாசிக்கப்படும் இடங்களில்  ஆஞ்சநேயர் இருகரங்களையும் கூப்பியபடியே இராமரின் திவ்விய  சரிதத்தை  மெய்மறந்து   கேட்டபடி கண்களில்  ஆனந்தக் கண்ணீர் வடிய நின்றிருப்பாராம்.  

அப்பொழுது நாம் கேட்கும் வரங்களையும் தருவார் வாயுமைந்தன் ஆஞ்சநேயர். எனவே  ஹனுமானின்   அருள் கிடைக்க ராமா எனத்  துதிப்போம். சூரிய பகவானிடமே கல்வி கற்ற ஞானவானான மாருதியின் அருள்  கிடைத்தால் நமக்குக் கல்வியும், ஞானமும், தீமைகளை அழிக்கும் வல்லமையும், எதிலும் வெற்றியும்  கிடைக்கும்;  சனி தோஷங்கள் நீங்கும். எனவே ஆஞ்சநேய ஜெயந்தியான நாளை  இராமாயணம் சுந்தரகாண்டத்தைப் படித்து ஶ்ரீராமர் மற்றும்  ஆஞ்சநேயரின் அருளைப் பெறுவோம். 


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/