மார்கழி பிரதோஷம் - ஒரு பார்வை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஜனவரி, 2024

மார்கழி பிரதோஷம் - ஒரு பார்வை.

மார்கழி தமிழ் மாதம் இன்று செவ்வாய்க்கிழமை 09.01.24 தேய்பிறை பிரதோஷம் நன்னாளகும். சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவஆலயங்களில் இன்று  நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.

பிரதோஷ காலம்.

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.


இன்றைய தினம் நாம் சந்தனம், பால், இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.


திருமண தடை நீங்கும்.

ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும் , கடன் பிரச்சனை தீரும், திருமணம் தடை நீங்கும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.


சிவனுக்கு விரதம்.

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும்.


வில்வ மாலை அர்ச்சனை.

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையதாகும்.


சிவனுக்கு அபிஷேம்.

பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், 

தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். 

பழங்கள் - விளைச்சல் பெருகும், 

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், 

நெய் - முக்தி பேறு கிட்டும். 

இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். 

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். 

எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், 

மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். 

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/