சாத்தான்குளம் - ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு மாவட்ட எஸ். பி. பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜனவரி, 2024

சாத்தான்குளம் - ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு மாவட்ட எஸ். பி. பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், ஜன.12, கடாட்சபுரம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டு. 




கடந்த 06.01.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் பகுதியில் ஆடு ஒன்று ஆழ்துளை கிணற்றில் உள்ளே விழுந்து சிக்கிக்கொண்டது. 



அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் ஆட்டை மீட்பதற்காக முயற்சித்துள்ளனர். 




அப்போது தீயணைப்புத்துறை வீரரான துரை என்பவர் தனது உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் உள்ளே சென்று உயிரை பணயம் வைத்து பத்திரமாக ஆட்டை மீட்டுள்ளார்.




இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.




மேற்படி உயிரை பணயம் வைத்து ஆட்டை மீட்ட சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்புத்துறை வீரர் துரை என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (11.01.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சால்வை அணிவத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.




இந்நிகழ்வின் போது பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அணில், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் திரு. மனோபிரசன்னா, உதவி மாவட்ட அலுவலர் ராஜு ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad