தூத்துக்குடி மாவட்டம், ஜன 20, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எதிரி கைது.
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதியை சேர்ந்த அன்பு மகன் கதிரவன் (43) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் கண்ணன் (43) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (19.01.2024) மேற்படி கதிரவன், காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதியில் உள்ள அவரது உறவினரின் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்ணன் என்பவர் கதிரவனிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரியான கண்ணனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக