அயோத்தி ராமர் சிலையில் இத்தனை சிறப்புகள் இருக்கு!: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஜனவரி, 2024

அயோத்தி ராமர் சிலையில் இத்தனை சிறப்புகள் இருக்கு!:

 


அயோத்தி ராமர் சிலையில் இத்தனை சிறப்புகள் இருக்கு!:



5 வயது பாலகனாக ராமரை நினைவுகூரும் வகையில் மைசூரு, பெங்களூரு, ராஜஸ்தான் என வெவ்வேறு இடங்களில் 3 சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.



இறுதியில், மைசூருவில் 10 டன் எடை பாறையிலிருந்து உருவான சிலை தான் அயோத்தி கோயிலின் கருவறையை அடைந்தது.

 


புகழ்பெற்ற கலைஞரான வாசுதேயோ காமத்தின் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு குழந்தை ராமர்  சிலை செதுக்கப்பட்டது.



உற்று நோக்கினால் சிலையின் மேல்புற வளைவில் கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் புலப்படும். சிலையின் வலது பக்கத்தில் ஹனுமனும், இடதுபக்கத்தில் விஷ்ணுவின் வாகனமான கருடனும் அமைக்கப்பட்டுள்ளது.



சுவஸ்திக் மற்றும் ஓம் அடையாளம், கதாயுதம், சக்கரம், சங்கு உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களும் உள்ளன. இடது கையில் வில் அம்பு தாங்கி, வலது கரத்தால் ஆசிர்வதித்தபடி தாமரை பீடத்தில்  காட்சியளிக்கிறார் குழந்தை ராமர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர் பீர் மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/