திருச்செந்தூா் கோட்டத்தில் அனுமதியின்றி டிரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை - சப் கலெக்டர் குரு சந்திரன் தகவல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

திருச்செந்தூா் கோட்டத்தில் அனுமதியின்றி டிரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை - சப் கலெக்டர் குரு சந்திரன் தகவல்.

திருச்செந்தூர், ஜன்.27, திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோயில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகே டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதியுள்ளது.


இந்நிலையில், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள இதர இடங்களிலும் உரிய அனுமதியில்லாமல் டிரோன்கள், மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த புகாரை அடுத்து ஐன.26 நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


இந்த தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை விதித்து அபராதம் மற்றும் டிரோன் கேமிராக்கள் பறிமுதல் செய்யப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/