தூத்துக்குடி - நாட்டின் 75வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

தூத்துக்குடி - நாட்டின் 75வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்.

தூத்துக்குடி, ஜன.26, இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்  கோ. லட்சுமிபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


75வது குடியரசு தின விழா தூத்துக்குடி தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  கோ. லட்சுமிபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டது. பின்பு அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். 

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 65லட்சத்து 55ஆயிரத்து 936 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கெளரகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, திட்ட அலுவலர் ஐஸ்வர்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுகாசிம், தாசில்தார்கள் பிரபாகரன், ஜான்சன், விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டிஎஸ்பிகள் சுரேஷ், அருள், லோகேஸ்வரன், ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், காவல்துறை மக்கள் தொடர்பு அலுவலர் சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழ்நாடு காவல்துறை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த 80 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கம்  வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  அருள் ஆகியோர் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அமைச்சுபணியாளர்கள் உட்பட 79 காவல்துறையினருக்கு மாவட்ட பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் பெற்ற காவல்துறையினரையும், மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/