தூத்துக்குடி மாவட்டம், பிப்.22, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 25.02.2024 அன்று தூத்துக்குடிக்கு வருகிறார் அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல்வேறு அரசு பணிகளை தொடங்கி வைக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட சூசை பாண்டியாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
அந்த விழாவில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளதைத் தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, செயற்பொறியாளர் (கட்டடம்) செல்வி, பொறியாளர் பாலசுப்பிரமணியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக