தூத்துக்குடி மாவட்டம், பிப்.22, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 13ம் தேதி முதல் கட்ட போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் தற்போது இன்று பிப்.22 முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வாயில் முன்பு வருவாய்த்துறை ஆய்வாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் வருகிற 26 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் இந்தப் போராட்டத்திலும் உடன் பாடு ஏற்படவில்லையெனில் காலவரையற்ற வேலை செய்யப்படும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகம் பரபரப்பான நிலையில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக