மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா.

மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது  பிறந்தநாள் விழா.




செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு அஇஅதிமுக சார்பில் கழக பொதுச் செயலாளர்  எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச. ராஜேந்திரன் வழிகாட்டுதன் பெயரில் மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு  நகர அம்மா பேரவை இணை செயலாளர் எஸ் ஏ ஆர். சத்யா ( எ )சத்யராஜ் . ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகரச் செயலாளர் டி எஸ். ரவிக்குமார்  புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் கழக கொடி ஏற்றிகெட்டி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார் மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் அன்னதானம் வழங்கினார் நிகழ்ச்சியில் நகர அம்மா பேரவை செயலாளர் தசரதன், நகர அவைத்தலைவர் காளி,நகர துணை செயலாளர் பாளையம், அள்ளிமுத்து நகர எம்ஜிஆர் மன்ற பொருளாளர் தைலாவரம் பாக்கியம், நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் யுவராஜ்,  நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜி.பார்த்திபன். யோகா சங்கர், ஜெயக்குமார், யூசுப், 9வது வார்டு கிளை செயலாளர் கி .பிச்சை பிள்ளை, மற்றும் கழக முன்னோடிகள் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad