திருநெல்வேலி - கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்க உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

திருநெல்வேலி - கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்க உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம், பிப்.27, கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ரயில் கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டது, கடந்த மூன்று ஆண்டுக்கு மேலாக அதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே, தற்போது இன்று முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்பட்டு பழைய கட்டணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சாதாரண பயணிகள் ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்க தென்னக ரயில்வேக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன் மூலம் அம்பையிலிருந்து நெல்லைக்கு குறைந்த பட்ச கட்டணம் ₹10 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அம்பையில் இருந்து திருச்செந்தூருக்கு ₹25, சாத்தூருக்கு ₹ 30 மட்டுமே கட்டணம் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad