தென்திருப்பேரை - நம்மாழ்வார் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

தென்திருப்பேரை - நம்மாழ்வார் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், தென்திருப்பேரை, பிப்.28, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவில் குருவுக்கு அதிபதியானதும்  சுவாமி நம்மாழ்வார் அவதரித்த தலமும் ஆகும். 

நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் கிடைத்த  இன்நன்னாளை (மாசி விசாகம்) போற்றும் வகையில் ஆண்டு தோரும் மாசி திருவிழா கொண்டாடப்படுகிறது.


கொடியேற்றம் 
மாசி திருவிழா கடந்த 20ம் தேதி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில்  கொடி எற்றப்பட்டு தொடர்ந்து 13 நாட்கள்  தினசரி காலையும் மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகிறார். 


தேரோட்டம்
இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து  சுவாமி  நம்மாழ்வார் காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 7.45 மணி அளவில் ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர், ஆச்சாரிய குருக்கள்,  மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து கோவிந்தா கோபாலா, கோவிந்தா  கோபாலா என கரகோஷத்துடன் நான்கு ரத வீதிகள் வழியாக  தேர் இழுத்து வரப்பட்டு மதியம் நிலை வந்தடைந்தது. 


தெப்ப உற்சவம்.
நாளை 29ம் தேதி  இரவு  சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

மார்ச்1 ம்தேதி இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு  அருள் பாலிக்கிறார்.

மார்ச் 2ம் தேதி மதியம் தீர்த்தவாரி, தேரோட்ட நிகழ்ச்சியில்  ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மாசாணமுத்து, குற்றவியல் நீதிபதி மகராஜன், கோவில் செயல் அதிகாரி தமிழ்ச்செல்வி, திமுக நகர செயலாளர் கோபிநாத், முன்னாள் நகர திமுக செயலாளர் முத்து ராமலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் ( எ) கணேசன், உறுப்பினர்கள் கிரிதரன், செந்தில் குமார், காளிமுத்து, ராம லட்சுமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/