தூத்துக்குடி, பிப்.26, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை வேலை நிறுத்தம் காரணமாக 11 மணி வரை கவுண்டர் திறக்கப்படதால் மக்கள் மிகுந்த சிரமம்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி இன்று பிப்ரவரி.26 மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காலை 8 மணி முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.
வழக்கமாக பத்து மணிக்கு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கும் ஆட்சியர் அலுவலக கவுண்டர் திறக்கப்படும், ஆனால் இன்று வருவாய்த் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த கவுண்டர் 11 மணி வரை திறக்கப்படவில்லை.
இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் வெயிலில் காத்திருந்த பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனை அடுத்து அவர்களை மொத்தமாக ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் அனுமதித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக